தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பீர் விற்பனை களைக்கட்டியுள்ளது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. வெயிலின் தாக்கத்தை தனிக்க குடிமக்கள் அனைவரும் டாஸ்மாக்கில் தஞ்சம் அடைவதால், பீர் விற்பனை அமோகமாக உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைப் படி மது விற்பனையும் கண்காணிக்கப்பட்டு வருதால், பீர் விற்பனை அதிகரித்த செய்திக் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு வருடத்தில், தற்போது பீர் விற்பனை அதிகமாகியுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 500 பாட்டில் பீர்களுக்கு மேல் விற்பனையாவதாகவும், தமிழக டாஸ்மாக் கழகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த இரண்டு வருடத்தில் வெயில் அதிகரித்துள்ளதா? அல்ல குடிமக்கள் அதிகமானார்களா? என்று தெரியவில்லை.