வடமேற்கு வங்கக்கடலில், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் தொடர்ந்து நிலைபெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பில்லை என்பதால், கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்கு அதே இடத்தில் நீடிக்கும். அதன் பிறகு, அது படிப்படியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்தத் தாழ்வு பகுதி காரணமாகக் கடலோரப் பகுதிகளில் பெரிய அளவில் மழைப்பொழிவோ அல்லது புயல் போன்ற தீவிர வானிலை மாற்றங்களோ ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் தீவிரம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், வட தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு குறைகிறது. எனினும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இ.