Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்விக்கண் திறந்த காமராஜருக்கு கரூரில் வந்த சோதனை (வீடியோ)

Advertiesment
கல்விக்கண் திறந்த காமராஜருக்கு கரூரில் வந்த சோதனை (வீடியோ)
, சனி, 28 ஜூலை 2018 (16:46 IST)
கரூர் பேருந்து நிலையம் அருகே, அதுவும் கல்விகண் திறந்த காமராஜர் சிலையின் கீழ் புறமே, ஒரு தனியார் சொகுசு ஏ.சி. பாரில் 3 பீர்கள் வாங்கினால், ரூ 150 மதிப்புள்ள சிக்கன் லாலி பாப் அல்லது சிக்கன் கிரேவி அல்லது பிஸ் ப்ரை Free என விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது.

 
அதே விளம்பரத்தில் 4 லார்ஜ் மதுபான வகைகளை எது மாதிரியாக வாங்கினாலும், ரூ 150 மதிப்புள்ள உணவு வகைகளுக்கான கூப்பன் Free என்றும், அதே விளம்பரத்தில் 5 லார்ஜ் மதுபான வகைகளை வாங்கினால், ரூ 185 மதிப்பிலான உணவு வகைகளுக்கான கூப்பன் இலவசம் என்றும் அது அனைத்தும் ஆடி ஆப்பராகவும் இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி வரை மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அரசு இடத்தில் அதுவும் அனைவரும் கூடும் இடத்தில் அனைத்து கட்சியினருக்கும் தெரிந்த இடத்தில் மதுபான விற்பனை விளம்பர பலகை இரு புறமும், அதுவும் கல்விக் கண் திறந்த காமரஜரின் சிலையின் கிழ் பகுதியில் இரண்டு பகுதிகளிலும் இடம்பெற்றிருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. 
 
இது குறித்து அவ்வப்போது, ஆங்காங்கே அரசியல் பேசும் அரசியல் கட்சியினரும், காவல்துறையினரும், மூச்சு விடாமல் இருப்பதும், எந்த வித நடவடிக்கையும் இன்று வரை எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனையுடனும், வருத்தத்துடனும் உள்ளது என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
 
-சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலில் இதை நிறுத்துங்கள் பின்னர் இந்தியாவுடன் பேசலாம்; பாகிஸ்தான் பிரதமருக்கு அசாருதீன் அறிவுரை