பெங்களூரில் சசிகலாவுக்கு நடந்த அவமரியாதை: அதிமுகவினர் ஆவேசம்!
பெங்களூரில் சசிகலாவுக்கு நடந்த அவமரியாதை: அதிமுகவினர் ஆவேசம்!
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வர முயற்சி எடுத்துவருகிறார். இதற்கு அதிமுகவில் ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது.
கட்சியின் சில மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சசிகலா பொதுச்செயலாளராக வர வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் கட்சியில் உள்ள மற்றவர்கள், தொண்டர்கள் போன்றோர் சசிகலாவின் வருகையை ரசிக்கவில்லை.
சசிகலாவுக்கு ஆதரவாக ஆங்காங்கே வைக்கப்படும் பேனர்கள், போஸ்டர்களை அதிமுகவினரே கிழித்தும், சாணியடித்தும் வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரில் சசிகலா புகைப்படம் உள்ள பேனரில் சில அதிமுகவினர் செருப்பால் அடித்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சியின் போது பெங்களூரில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கர்நாடக அதிமுகவினர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது படத்தை செருப்பால் அடித்த சம்பவம் நடந்துள்ளது. செருப்பால் அடித்த இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.