Publish Date: Thu, 17 Jun 2021 (08:50 IST)
Updated Date: Thu, 17 Jun 2021 (08:51 IST)
நீட் தேர்வை இனிமேல் யாராலும் ரத்து செய்ய முடியாது என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்தவர் பாலகுருசாமி. இவர் நீட் தேர்வு உள்ளிட்ட பலவற்றைப் பற்றி சர்ச்சையான கருத்துகளை கூறிவருபவர். இந்நிலையில் நீட் தேர்வை இனிமேல் யாராலும் ரத்து செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிதான் ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பாலகுருசாமி மாணவர்கள் நீட்டுக்கு முன்னர் பல்வேறு தேர்வுகளுக்கு தயாராகி வந்தனர். இப்போது ஒரே தேர்வு என்பதால் அவர்களின் நேரம் மிச்சம் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளில் ஒன்றாக நுழைவுத் தேர்வு உள்ளது. இந்த தேர்வு மூலம் தமிழக மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மேலும் அது இட ஒதுக்கீட்டையோ, சமூக நீதியையோ பாதிக்கவில்லை. நாட்டிலேயே நீட் தேர்வை தமிழ்நாடு மட்டுமே எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே மாணவர்கள் தேர்வுக்கு உறுதியாக தயாராக வேண்டும் எனக் கூறியுள்ளார்.