பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அது செப்டம்பர் 1ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதித் துறை தெரிவித்துள்ளது
பிஎஃப் பெறும் ஊழியர்கள் தங்களின் பிஎஃப் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்திருந்தது. அவ்வாறு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் பிஎஃப் தொகை ஊழியர்களின் கணக்கில் சேர்க்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிஎஃப் கணக்குடன் ஆதார் அட்டை இணைப்பதில் பிரச்சினை இருப்பதாகவும் அதனால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்தனர். இதனை கருத்தில் கொண்டு தற்போது பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது