Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியாணி சாப்பிட்ட சிறுமி பலி: கடை உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன்!

பிரியாணி சாப்பிட்ட சிறுமி பலி: கடை உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன்!
, வெள்ளி, 22 அக்டோபர் 2021 (15:27 IST)
ஆரணி 7 ஸ்டார் பிரியாணி கடை உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன்!
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் 7 ஸ்டார் என்ற பெயரில் காதர் பாஷா- அம்ஜத் பாஷா ஆகிய தந்தை-மகன் உணவகம் நடத்தி வருகின்றனர். இவரின் கடையில் துந்தரீகம் பட்டைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும், அவரின் மனைவி பிரியதர்ஷினி, மகள் லோசினி (10), மகன் சரண் (14), ஆகியோர் கடந்த செப்டம்பர் 8ம் தேதி உணவு சாப்பிட்டு வீட்டுக்கு சென்றதும் அனைவரும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில்  10வயது சிறுமி லோசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
அதையடுத்து அந்த பிரியாணி கடை உரிமையாளர், சமையல் மாஸ்டருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும், பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி லோசினி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர உறுதி அளித்தது. 
 
இந்நிலையில் கடையின் உரிமையாளர் அம்ஜத்பாஷா அதற்கு ஒப்புக்கொண்டு உறுதியளித்ததை அடுத்து உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆரணி காவல் நிலையத்தில் 2 வாரத்திற்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரியர் தேர்வு எழுதமால் சான்றிதழ் வழங்கக்கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி!