Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர். நாடு சுபிட்சம் ஆகுமா?

பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர். நாடு சுபிட்சம் ஆகுமா?
, புதன், 10 மே 2017 (07:14 IST)
ஒவ்வொரு ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா மதுரை மக்களுக்கு இன்னொரு தீபாவளி போன்றது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் அணிந்து வரும் உடையை பொறுத்தே அந்த ஆண்டில் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் ஊகிக்கப்படும்.



 


பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், அந்த ஆண்டு முழுவதும் நாடு வளமாக, சுபிட்சமாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இந்த நிலையில் சற்று முன்னர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்; ‛கோவிந்தா' கோஷம் என பக்தர்கள் பரவசத்துடன் முழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை 2 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்ட அழகர் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர், தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி எதிரில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளினார்.

பின்னர் ஒவ்வொரு மண்டகப்படியாக வந்த அழகர் சரியாக காலை 6.30 மணிக்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா' கோவிந்தா என்ற கோஷங்கள் முழங்க பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வெள்ளிக் குதிரையில் எழுந்தருளிய வீரராகவப் பெருமாள் வரவேற்றார்.

அழகர் ஆற்றில் இறங்கியஅவுடன் அவர் மீது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்து பரவசம் அடைந்த காட்சி காண்போரை மகிழ செய்தது. மேலும். ஏராளமான பக்தர்கள் கைகளில் தீபம் ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிக்கல் அட்டாக்: ராஜ்நாத் சிங் அதிரடி