Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – பல்டிக்கு விளக்கமளித்த அய்யாக்கண்ணு !

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (10:29 IST)
நடக்க இருக்கும் தேர்தலில் எந்த கட்சிக்கும் தங்கள் சங்கத்தின் ஆதரவு இல்லை என்று விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும், அதுமட்டுமின்றி தன்னுடன் 111 விவசாயிகளும் அதே தொகுதியில் போட்டியிட போவதாகவும் சமீபத்தில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு அறிவித்திருந்தார். இதனால் நூறுக்கும் மேற்பட்டோர் மோடியின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டால் அங்கு வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு நேற்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு மோடியை எதிர்த்து போட்டியிடும் முடிவை திரும்பப்பெறுவதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளை பாஜக அரசு நிறைவேற்றுவதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.

இதனால் அய்யாக்கண்ணு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அய்யாக்கண்ணு தேர்தலுக்குப் பின்னர் பாஜகவில் இணையப்போவதாகவும் செய்திகள் உலாவந்தன. இதையடுத்து நேற்று நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் பேசிய அய்யாக்கண்ணு ‘ அமித் ஷா உடனான சந்திப்பின் போது அவர் பாஜகவின் தேர்தல் அறிக்கையைக் காட்டி விவசாயிகளின் கோரிக்கையான நதிநீர் இணைப்பு ஆணையம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னரே தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்கினேன். ஆனால் சங்கம் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தராது’ எனக் கூறினார். இதையடுத்து எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவை ஒருமனதாக நிறைவேற்றியது விவசாயிகள் சங்கம்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments