Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்கட்ட வாக்குப்பதிவு: ஜனநாயக கடமையாற்ற தலைவர்கள் வேண்டுகோள்

முதல்கட்ட வாக்குப்பதிவு: ஜனநாயக கடமையாற்ற தலைவர்கள் வேண்டுகோள்
, வியாழன், 11 ஏப்ரல் 2019 (07:30 IST)
91 மக்களவை தொகுதிகளிலும், ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தொகுதிகளிலும் சற்றுமுன் வாக்குப்பதிவு ஆரம்பமானது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 
 
ஆந்திராவில் 175 தொகுகளிலும், அருணாச்சல பிரதேசத்தில் 60வ்தொகுகளிலும், சிக்கிமில் 32 தொகுகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில் இன்று தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுமாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள்; முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வலியுறுத்துவதாக பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

webdunia
அதேபோல் வாக்களிப்பது நமது கடமை; அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று நாக்பூர் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பின் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி உள்பட பல அரசியல்கட்சி தலைவர்கள் வாக்காளர்கள் தங்கள் கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு