Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயுத பூஜைக்கு 3 பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்!

ஆயுத பூஜைக்கு 3 பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்!
, வியாழன், 7 அக்டோபர் 2021 (11:06 IST)
ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு உள்பட 3 பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
1. தாம்பரம்‌ இரயில்‌ நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்: திண்டிவனம்‌ மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும்‌ பேருந்துகள்‌,  சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகள்‌, திண்டிவனம்‌ வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்‌, சிதம்பரம்‌, காட்டுமன்னார்கோயில்‌ செல்லும்‌ பேருந்துகள்‌, மற்றும்‌ திண்டிவனம்‌ வழியாக புதுச்சேரி, கடலூர்‌, சிதம்பரம்‌ செல்லும்‌ பேருந்துகள்‌.
 
2. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்: வேலூர்‌, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர்‌, காஞ்சிபுரம்‌, செய்யாறு, ஒசூர்‌, திருத்தணி மற்றும்‌ திருப்பதி செல்லும்‌ பேருந்துகள்‌, 
 
3. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்:| மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும்‌ பேருந்துகள்‌ புதுச்சேரி, கடலூர்‌ மற்றும்‌ சிதம்பரம்‌ வழி 09), மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, கும்பகோணம்‌, திருவாரூர்‌, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம்‌, வேளாங்கண்ணி, அரியலூர்‌, ஜெங்கொண்டம்‌, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர்‌, நாகர்கோவில்‌, கன்னியாகுமரி, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, திருப்பூர்‌, ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம்‌, சேலம்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ பெங்களூரூ
 
எனவே பயணிகள்‌ மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள்‌ மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகம்‌ மூலம்‌ இயக்கப்படும்‌. பயணிகள்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்து பயணம்‌ மேற்கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியின் கனவைக் கலைத்த புவனேஸ்வர், மாலிக்