Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கட்டணத்தில் தான் ஆட்டோக்களை இயக்குவோம்: ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு..!

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (09:50 IST)
ஆட்டோ கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், அதிக கட்டணம் கேட்கும் ஆட்டோ டிரைவர்கள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆட்டோ கட்டணங்களை அரசு அறிவிக்காததால், புதிய கட்டணத்தை நாங்களே  நிர்ணயம் செய்துள்ளோம் என்றும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் புதிய கட்டணத்தில் தான் ஆட்டோக்களை இயக்குவோம் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தின் படி, 1.8 கிலோமீட்டருக்கு ரூ.50 மற்றும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.18 அதிகரிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில், பகல் நேர கட்டணத்தை விட 50 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ கட்டணம் அரசு மாற்றியமைத்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. பெட்ரோல் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதால், இந்த தொழிலை நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால், பிப்ரவரி 1 முதல் உயர்த்தப்பட்ட ஆட்டோ கட்டணத்தில் தான் ஆட்டோக்களை இயக்குவோம் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments