Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யமுனை நதியில் விஷம்?! 14 பக்க அறிக்கையை காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்! - தேர்தல் ஆணையத்தின் ரியாக்‌ஷன் என்ன?

Prasanth Karthick
வியாழன், 30 ஜனவரி 2025 (09:21 IST)

யமுனை நதி நீர் குறித்த அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சுக்கு உரிய ஆதாரத்தை சமர்பிக்க தேர்தல் ஆணையம் கெடு விதித்த நிலையில் 14 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

 

டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘அரியானா பாஜக அரசு யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக’ பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

 

இதுகுறித்து நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் நேற்று இரவு 8 மணிக்குள், அரவிந்த் கெஜ்ரிவால் அவர் பேசியதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என கெடு விதித்தது. இந்நிலையில் தான் பேசியது உண்மைதான் என 14 பக்க அறிக்கையை அளித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

 

அதில் யமுனை நதிநீரில் ஏற்பட்டுள்ள கடும் சுகாதாரக்கேடு காரணமாக அது குடிக்க முடியாததாக மாறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், நகரத்தில் குடிநீரின் தரம் காரணமாக அவசர பொது சுகாதார நெருக்கடியை முன்னிலை படுத்த விரும்புவதாகவும், இதில் எந்த நடத்தை விதிமுறைகளையும் தான் மீறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

மேலும் அரியானாவில் இருந்து பெறப்பட்ட யமுனை நதிநீரில் அமோனியாவின் அளவு அதிகமாக இருப்பதால் சுத்திகரிப்பு செய்தும் கூட அது பயன்படுத்த முடியாத அளவில் இருப்பது டெல்லி மக்களுக்கு பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்.. நேரா குவாண்டம் ஜம்ப்தான்! - பிரதமர் மோடி அதிரடி!

சேலத்தில் பிறந்து 9 நாள் ஆன குழந்தை ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை.. பெற்றோர் மீது வழக்கு..!

தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

பிரதமராகவே இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்! - பிடிவாதமாய் பிரதமர் மோடி செய்த காரியம்!

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments