அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

Mahendran
வியாழன், 5 ஜூன் 2025 (14:37 IST)
அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்தது எனக்கு தெரியாது என்றும், ராமதாஸ் எனது நீண்ட கால நண்பர். அந்த நட்பின் அடிப்படையில் அவரை சந்திக்க வந்தேன் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாமகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை நீக்க ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ஆகிய இருவரும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த சந்திப்புக்கு பின்னர் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைச்சாமி ஆகிய இருவரும் டாக்டர் ராமதாஸ் அவர்களை சந்தித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், ராமதாஸ் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி, “அன்புமணி, ராமதாஸ் அவர்களை சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது,” என்று கூறினார். “நான் பாஜகவிற்காக இங்கு வரவில்லை. ராமதாஸ் என்னுடைய நீண்ட கால நண்பர். எனவே, அவரை நட்பின் அடிப்படையில் மரியாதை நிமித்த சந்திப்பு நடத்தவே வந்தேன்,” என்று தெரிவித்தார்.
 
மேலும், “பிரச்சினை இருக்கும் இடத்திற்கு நான் செல்லவில்லை; நான் இருக்கும் இடத்திற்கு தான் பிரச்சனை தேடி வருகிறது,” என்றும் அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
 
அன்புமணி மற்றும் ராமதாஸ் சந்திப்பே தனக்கு தெரியாது என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியிருப்பது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments