Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீர்த்தத்தில் விஷம் கலந்து கொலை முயற்சி! அர்ச்சகரும் தற்கொலை முயற்சி! - என்ன நடந்தது?

poison

Prasanth Karthick

, சனி, 21 டிசம்பர் 2024 (11:37 IST)

கள்ளக்குறிச்சியில் 5 பேரை கொலை செய்ய முயன்றதோடு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற அர்ச்சகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் கணேசன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். ஜோசியம் பார்ப்பது, குறி சொல்வது உள்ளிட்ட பல செயல்களை செய்து வந்த இவர் சில ஆண்டுகள் முன்னதாக கணேசன் அனுமதியோடு வீட்டு அருகிலேயே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றை கட்டியுள்ளார்,.

 

அர்ச்சகரான முரளிக்கு உதவியாளராக கணேசனின் சொந்தக்கார பையன் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் பல இடங்களில் கடன் வாங்கி கோவிலில் திருவிழாவை நடத்தியுள்ளார் அர்ச்சகர் முரளி. ஆனால் கடனை திரும்ப கட்டாததால் அவரை கடன் கொடுத்தவர்கள் மிரட்டி வந்துள்ளனர்.

 

இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன் குடும்பத்தினர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது சானிட்டசைரை தீர்த்தத்தில் கலந்து அனைவருக்கும் குடிக்கக் கொடுத்துள்ளார் அர்ச்சகர் முரளி. அதன்பின்னர் தானும் குடித்துள்ளார். இதனால் சிறிது நேரத்தில் எல்லாரும் மயங்கி விழுந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கணேசன் குடும்பத்தை கொல்ல முரளி முயற்சிக்க என்ன காரணம்? முரளி ஏன் தற்கொலை செய்ய முயன்றார்? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு