கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிம் மதுரைம் தாய்லாந்தும் துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமான கட்டணம் கிட்டதட்ட மூன்று மடங்கு உயர்ந்து உள்ளதாக நான் கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. உயர்ந்த கட்டணங்களின் விபரங்கள் இதோ:
சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் - ரூ.4,796, இன்றைய - கட்டணம் ரூ.414,281
சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,300, இன்றைய - கட்டணம் ரூ.417,695.
சென்னை - தாய்லாந்து வழக்கமான கட்டணம் - ரூ.48,891, இன்றைய - கட்டணம் ரூ.417,437.
சென்னை- துபாய் வழக்கமான கட்டணம் - ரூ.412,871, இன்றைய கட்டணம் - ரூ.426,752