கல்லூரியில் படித்த போதே மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினேன்: திருநாவுக்கரசு பகீர் வாக்குமூலம்

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (18:09 IST)
பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக தெரியவந்துள்ளது.


 
ஏராளமான பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல் பொள்ளாச்சி அருகே கைது செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு  தலைமறைவாக இருந்து வந்த நிலையில், பொள்ளாச்சியில் மாசினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
 
ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே நட்பாகப் பழகும் பெண்களை மயக்கி, ஆபாசமாக படம்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக  திருநாவுக்கரசு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  இந்த இந்த விவகாரத்தில் தன்னோடு சேர்த்து நான்கு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசாரிடம் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். ஏழாவன வீடியோக்கள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அப்படி எதுவும் இல்லை என்றும் அப்படி ஏதும் இருந்தால் தகவல் தடுக்கப்படும் என்றும் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் தெரிவித்தார். 
 
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் திருநாவுக்கரசுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து திருநாவுக்கரசு  கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்