Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த நாட்டிற்கு எப்படி போகணும்: கிண்டலடித்த அஸ்வின்

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (11:34 IST)
நித்தியானந்தா அறிவித்த கைலாஷ் நாட்டிற்கு எப்படி போகவேண்டும்? எப்படி விசா எடுக்க வேண்டுமென கிரிக்கெட் வீரர் அஸ்வின் கிண்டலடித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், கைலாஷ் என்ற ஒரு தனிநாட்டை அறிவித்து அந்த நாட்டிற்கு பாஸ்போர்ட் விசா வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார் 
 
மேலும் இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டின் குடிமகனாக தகுதி உடையவர்கள் என்றும், ஏற்கனவே இந்த நாட்டில் 10 கோடி பேர் குடிமகனாக பதிவு செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாட்டின் பிரதமராக அவர் தன்னைத்தானே அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கைலாஷ் நாட்டிற்கு எப்படி போகவேண்டும்? அந்த நாட்டிற்குப் போக எப்படி விசா எடுக்க வேண்டும்? என்று கிண்டலுடன் கூடிய டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்