ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி “கைலாசம்” என பெயரிட்டுள்ளார் நித்யானந்தா.
நித்யானந்தா இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள இந்து ஆன்மீக பக்தர்களால் ஆன்மீக குருவாக ஏற்கப்பட்டவர். இவர் பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் மடங்கள் வைத்துள்ளார். மேலும் பாடசாலைகள் பலவும் வைத்துள்ளார்.
நித்யானந்தா மீது சமீப காலமாக பாலியல் வன்முறை, சிறுமிகளை வசியம் செய்து வைத்திருப்பது போன்ற புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது அவருடன் இரண்டு பெண் சீடர்களும், குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கென்று தனி ”வெப்சைட்” ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தீவில் மருத்துவம், கல்வி ஆகியவை இலவசம் எனவும் கூறப்படுகிறது. அந்த தீவை தனி நாடு போல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார் நித்யானந்தா. அதாவது தனி சின்னம் பதித்த தனி கொடி, தனி பாஸ்போர்ட், தென் அமெரிக்க நாட்டின் சட்ட உதவியுடன் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நித்யாந்தா உலகம் முழுவதிலுமுள்ள தந்து பக்தர்களிடம் தங்கமும், பணமும் வசூல் இந்த தீவை வாங்கியுள்ளார் என நித்தியானந்தா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு கோடிக்கு இந்த தீவை வாங்கினார் என்பது குறித்தான விவரம் தெரியவில்லை.