Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்தான் சிவன்; நீதான் பார்வதி! – நித்தியின் லீலைகளை அம்பலப்படுத்திய பெண்!

நான்தான் சிவன்; நீதான் பார்வதி! – நித்தியின் லீலைகளை அம்பலப்படுத்திய பெண்!
, செவ்வாய், 26 நவம்பர் 2019 (18:58 IST)
பெண்களை மறைத்து வைத்திருப்பதாக நித்தியானந்தா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பற்றி கனடாவை சேர்ந்த பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளார்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் குழந்தைகள், பெண்கள் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள புகார்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பெங்களூரூவை சேர்ந்தவரின் இரண்டு பெண்களை நித்தியானந்தா மறைத்து வைத்திருப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் அவரை கைது செய்து விசாரிக்க இருந்த நிலையில் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி போய்விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல பெண்கள் நித்யானந்தா குறித்த ரகசியங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவை சேர்ந்த சாரா லாண்ட்ரி என்ற பெண் நித்தியானந்த மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுமார் 20 பக்கத்துக்கு நீளும் அவரது புகார் கடிதத்தில் நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ளவர்களை பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்தியது குறித்தும் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் நித்யானந்தா ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியபோது ஆன்மீக நாட்டத்தில் அவரது ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார் சாரா. அவருக்கு ஸ்ரீ நித்திய பிரியானந்தா என பெயர் சூட்டி ஆசிரமத்தில் உள்ள அலுவல் வேலைகளை பார்க்க நியமித்திருக்கிறார்கள்.

அதற்கு பிறகு அடிக்கடி நித்யானந்தாவிடமிருந்து ஆபாச வீடியோக்கள், குறுந்தகவல்கள் சாராவுக்கு வந்திருக்கிறது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த சாரா மற்றொரு ஆசிரமத்திற்கு சென்றபோது அங்கு பல இளம்பெண்களை நித்யானந்தா பாலியல்ரீதியாக சீண்டுவது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் புகாரில் தெரிவித்துள்ள அவர் ”நித்யானந்தா தன்னை சிவன் என்றும், மற்ற பெண்களை பார்வதி தேவி என்றும் கூறி, தன்னோடு சேர்ந்தால் நித்திய மோட்சம் அடையலாம் என மூளை சலவை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மேலும் பலர் நித்யானந்தா குறித்து புகார் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் திறக்கப்பட உள்ள ’நோக்கியா ஆலை’ : ’10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு’ !