திருப்பூர் மாவட்டத்திற்கு வேலை தேடி வந்த ஒடிசா பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணி நூற்பாலைகள் அதிகம் உள்ள திருப்பூரில் வேலை தேடி பல வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர், குழந்தையுடன் வேலை தேடி திருப்பூர் வந்துள்ளார். திருப்பூர் ரயில் நிலையம் அருகே நின்றுக் கொண்டிருந்த அவர்களிடம் பீகாரை சேர்ந்த 3 தொழிலாளிகள் பேசியபோது அவர்கள் வேலைத் தேடி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பின்னர் தங்களுக்கு தெரிந்த நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், தாங்கள் சேர்த்து விடுவதாகவும் கூறி இளம்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அவர்கள் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இளம்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தையை கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் கண் முன்னரே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் பீகாரை சேர்ந்த நதீம், டானிஷ் மற்றும் முர்சித் ஆகியோரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Edit by Prasanth.K