Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 48 மணி நேரத்தில்... வலுவிழக்கும் அசானி புயல்!

Webdunia
திங்கள், 9 மே 2022 (11:05 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற நிலையில் அதற்கு அசானி என பெயரிடப்பட்டது.
 
தற்போது அசானி புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது நாளை ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரையோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
நாளை முதல் 3 நாட்களுக்கு கடலோர ஒடிசா பகுதிகளில் மிக கனமழைக்கும், வட கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை மாலையும் மிக கனமழைக்கு வாய்ப்பு. இதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments