Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை தடுப்பூசி முகாமின் இலக்கு என்ன?

சென்னை தடுப்பூசி முகாமின் இலக்கு என்ன?
, ஞாயிறு, 8 மே 2022 (12:09 IST)
சென்னையில் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே இன்றைய முகாமின் இலக்கு என சென்னை மேயர் பிரியா பேட்டி. 

 
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது. 2 கோடி பேரை இலக்காக வைத்து முகாம் நடத்தப்படுகிறது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் முகாம் நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை. மாநிலம் ஒன்றில் ஒரே நாளில் 1 லட்சம் முகாம்கள் நடத்துவது இதுவே முதல் முறை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் கே.கே.நகரில் 29-வது மெகா தடுப்பூசி முகாமை துவக்கிவைத்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை மேயர் பிரியா, சென்னையில் 2 வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே இன்றைய முகாமின் இலக்கு என தெரிவித்துள்ளார்.  மேலும் முகக்கவசம் கட்டாயமில்லை என்றாலும் பாதுகாப்புக்காக போடுவது அவசியம் என  தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை எதிர்த்திட்ட தமிழகம் – ஆளுநருக்கு சீமான் பதிலடி!