திரைத்துறையில் இயக்குனராக வலம் வந்த சீமான் 2010ம் வருடம் நாம் தமிழர் கட்சி என்கிற ஒரு அரசியல் கட்சியை துவங்கினார்.கட்சி துவங்கியது முதலே தமிழ் தேசியத்தை தனது கொள்கையாக முன் வைத்தார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகளான அதிமுக, திமுக போன்ற கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.திராவிட கட்சிகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.. திராவிட கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சிதான் மாற்று என்றெல்லாம் பேசி ஒரு குறிப்பிட்ட சதவீத இளைஞர்களை தன் பக்கம் இழுத்தார்.
அதிமுக, திராவிட போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாத குறிப்பிட்ட சதவீதம் இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை வாங்கி ஆச்சரியப்படுத்தியது. அதேநேரம் நேரத்திற்கு ஏற்றது போல மாறி மாறி பேசும் பழக்கம் கொண்டவர் சீமான்.
கட்சி ஆரம்பித்த போது பெரியாரை தூக்கிப் பிடித்த சீமான் ஒரு கட்டத்தில் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.. திமுகவை கடுமையாக விமர்சிப்பார்.. அதேநேரம் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசுவார்.. அதேபோல் இலங்கை சென்று விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனை சந்தித்ததாகவும், அவர் வீட்டில் ஆமை கறி சாப்பிட்டேன்.. நான் சாப்பிடும் போது ஒருவர் பின்னால் நின்று குறிப்பெடுத்தார்.. ஒரு கப்பல முழுவதும் ஏகே 74 துப்பாக்கிகள் என்றெல்லாம் கூறினார்..
இதனால் சமூகவலைத்தளங்களில் பலரும் சீமானை ட்ரோல் செய்வதுண்டு. அதே நேரம் சீமானுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத ஆதரவும் உண்டு.. 2026 சட்டமன்ற தேர்தலில் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவிருக்கிறது.
இந்நிலையில் வழக்கறிஞரும் திமுக ஆதரவாளருமான அருள்மொழி ஊடகம் ஒன்றில் பேசியபோது கொசு வந்தால் அடிக்கலாம்.. ஈ வந்தால் யோசிப்போம்.. ஆனால் பச்சை வண்ண பூச்சி ஒன்னு இருக்கு.. அதை அடித்தால் கை நாறும்.. அப்படிப்பட்டவர்தான் சீமான் என கருத்து தெரிவித்துள்ளார்.