Publish Date: Thu, 03 Dec 2020 (15:07 IST)
Updated Date: Thu, 03 Dec 2020 (15:10 IST)
தற்போது ரஜினி தொடங்க உள்ள கட்சியில் அர்ஜுன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பாஜகவிலிருந்து பதவி விலகியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தான் தொடங்கபோகும் புதிய கட்சியின் தலைமை செயலாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரை அறிவித்துள்ளார். இந்த அர்ஜுன மூர்த்தி தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் பதவியை வகித்து வந்தார். தற்போது ரஜினி கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவில் தான் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் விலகியுள்ளார் அர்ஜுன மூர்த்தி.