Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைவா நீங்களும் அரசியலுக்கு வரணும்! – விஜய்க்காக மொட்டையடித்த ரசிகர்கள்!

Advertiesment
தலைவா நீங்களும் அரசியலுக்கு வரணும்! – விஜய்க்காக மொட்டையடித்த ரசிகர்கள்!
, வியாழன், 3 டிசம்பர் 2020 (12:59 IST)
நீண்ட ஆண்டு இழுபறிக்கு பிறகு ஒருவழியாக அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில் விஜய்யும் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் கோவில்களில் வேண்ட தொடங்கியுள்ளனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என தீவிரமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி விஜய் பெயரில் கட்சி தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்தான் கட்சி தொடங்கி விட்டார் என ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், தனக்கும் அந்த கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்தார் நடிகர் விஜய்.

தொடர்ந்து அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்மநாபன், விஜய்யின் தாய் ஷோபா ஆகியோர் கட்சியை விட்டு விலகியதால் இதை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என எஸ்.ஏ.சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய் திரைத்துறைக்குள் நுழைந்து 27 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டான நிலையில் பலர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என மயிலாடுதுறை விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வேண்டுதல் வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெருங்கி வரும் புரெவி; போக்குவரத்துக்கு தடை விதித்த கொடைக்கானல்! – இன்று முதல் அமல்!