Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்தியில் மோடி; தமிழகத்தில் ரஜினி: ஸ்கெட்ச்சு வொர்க் அவுட் ஆகுமா??

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (10:12 IST)
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல் வெற்றி பெற்றிட இந்து மக்கள் கட்சி சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு.  
 
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.    
 
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல் வெற்றி பெற்றிட இந்து மக்கள் கட்சி சார்பில் புகழ்பெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகிறோம். மாவட்டம் தோறும் ஆன்மிக அரசியல் மாநாடு நடத்தி வருகிறோம். 
 
234 தொகுதிகளிலும் ரஜினி கைகாட்டும் வேட்பாளர் வெற்றி பெற இந்த ஆன்மிக அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது. திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வெல்ல வேண்டும். தமிழகத்தில் திராவிட அரசியலுக்கும், ஆன்மிக அரசியலுக்குமான போட்டியில் ஆன்மிக அரசியல்தான் வெல்லும். 
 
பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிட்டாலும் மத்தியில் மோடி, மாநிலத்தில் ரஜினி என்பதே இந்து மக்கள் கட்சியின் திட்டம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் ரஜினியின் கரத்தை வலுப்படுத்துவோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணத்தாசை காட்டி மயக்கி 30 பெண்களோடு உல்லாசம்! வீடியோ எடுத்து ஷேர் செய்த மெடிக்கல் உரிமையாளர்!

பட்ஜெட்டிற்கு பின் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து முடிவுகள் அறிவித்த தெலுங்கானா: 46.25% உள்ளவர்கள் யார்?

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்ற மனைவி.. பேஸ்புக் காதலனுடன் ஓட்டம்..!

1 ஓட்டுக்கு ரூ.3000 கொடுக்கும் பாஜக.. பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments