ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் –அர்ஜுன் சம்பத்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (11:17 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கிவந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும் அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனையடுத்து தமிழக மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டது.

இந்நிலையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டத்திலே தொழில் வளர்ச்சி, வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லை ஆலை மீண்டும் திறக்கபட வேண்டும்’ என்றார்

மேலும் ஹைட்ரோகார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், கூடங்குளம் அனு உற்பத்தி திட்டம்  போன்ற திட்டங்கள் தமிழகத்திற்குத் தேவை எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments