Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆ.ராசாவை கண்டித்து அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

ஆ.ராசாவை கண்டித்து அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
, திங்கள், 26 செப்டம்பர் 2022 (12:39 IST)
ஆ.ராசாவை கண்டித்து அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின்தடை, மின் கட்டணத்துக்கும் எதிர்ப்பு.


கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம்  அருகே இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்து  மக்களின் மனதை புண்படுத்தும், விதமாக ஆ.ராசா எம்பி பேசியதாக கூறி அவரது உருவ படத்தை கிழித்தும் செருப்பால் அடித்தும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

மேலும் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பறித்தனர். பின்னர் பெட்ரோல் குண்டு சம்பவத்தில் தமிழகம் முழுவதும் ஒருவர் கூட கைது செய்யப்படாததை கண்டித்து காவல்துறைக்கு எதிரான முழக்கஙகளையும் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத் என்.ஐ.ஏ - கைது நடடிக்கை  இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை எனவும் ஆனால் விடுதலை சிறுத்தைகள் நாம் தமிழர் போன்ற கட்சிகள் என்.ஐ.ஏ சோதனையை எதிர்க்கின்றனர்.

2019"ஆம் ஆண்டு மக்களவையில் திமுக ஓட்டு போட்டு ஆதரித்துதான் என்.ஐ.ஏ கொண்டு வரப்பட்டது.  இந்து முஸ்லிம் மோதலை உருவாக்கும் நோக்கில் எஸ்.டி.பி.ஐ பி.எப்.ஐ செயல்பாட்டை முறியடிர்துள்ளோம் எனவும் மேலும் இந்து மற்றும்  முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.

மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது அமித்ஷா மற்றும் மோடி அவர்கள் நேரடியாக பெட்ரோல் குண்டு விவகாரத்தில் தலையிட வேண்டும் முதல்வரிடம் விளக்கம் கேட்க வேண்டும் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என  வலியுறுத்தினார்.

இந்த போராட்டத்தின் போது பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் செருப்பால் ஆ.ராசா உருவப்படத்தை அடித்தும் கிழித்தும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா சிலைக்கு செருப்பு மாலை! – விழுப்புரத்தில் பரபரப்பு!