Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியாணி சாப்பிட்டோர் பாதிப்பு… 41 பேர் மருத்துவமனையில்..! – அறந்தாங்கியில் அதிர்ச்சி!

Advertiesment
Semiya Chicken Biriyani
, வெள்ளி, 6 மே 2022 (10:06 IST)
அறந்தாங்கியில் கடை ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பள்ளி மாணவி சவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் உணவுக்கடைகளில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று அறந்தாங்கியில் உள்ள ஏ1 என்ற உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட கட்டிட தொழிலாளர்கள் 13 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அதே கடையில் பிரியாணி சாப்பிட்ட மாணவர்கள் சிலரும் வாந்து, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது மேலும் 14 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரியாணி சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இரண்டு நாட்களில் வலுபெறும்! – வானிலை ஆய்வு மையம்!