Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரத்து: முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல்

Advertiesment
chennai
, சனி, 12 ஆகஸ்ட் 2023 (18:14 IST)
இந்திய சினிமாவின் முன்னணி  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்,  தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில்,  சென்னை பனையூரில்  ஏ.ஆர்.ரஹ்மான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், இன்று மழை காரணமாக மைதானத்தில் மழை நீர் தேங்கியதால்  இன்று நடக்கவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் தன் டுவிட்டர் பக்கத்தில் விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  இன்று பனையூருக்கு வந்து கொண்டிருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர். சில ரசிகர்கள் இசை  நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டு திரும்பிச் சென்று கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், சோழிங்கநல்லூரில் இருந்து ஈ.சி.ஆர் ஐ இணைக்கும் சாலைகளில் தற்போது போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவினருக்கும், தூண்டிவிடும் சமூகவிரோதிகளுக்கும் கடும் கண்டனம்! -எடப்பாடி பழனிசாமி