Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தி திணிப்பு பிரச்சனை: ஒரே டுவீட்டில் தமிழர்களை அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

Advertiesment
இந்தி திணிப்பு பிரச்சனை: ஒரே டுவீட்டில் தமிழர்களை அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்!
, ஞாயிறு, 2 ஜூன் 2019 (14:37 IST)
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜக தமிழகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணித்து வருவதாக நேற்று முதல் அரசியல் கட்சி தலைவர்களும், சமூக வலைத்தள போராளிகளும் இணையதளத்தில் போராடி, இந்தி திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்ட் ஆக்கினர். இதற்கு பதிலடியாக இந்தி வேண்டும் என்ற ஹேஷ்டேக்கும் இன்று டிரெண்ட் ஆனது
 
இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். தனுஷ் நடித்த 'மரியான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன? என்ற பாடலை ஒரு பஞ்சாப் சீக்கியர் பாடும் வீடியோவை பதிவு செய்த ரஹ்மான், 'தமிழ் பஞ்சாபிலும் பரவியுள்ளது' என்று ஒரே ஒரு வரி டுவீட்டை பதிவு செய்து தமிழின் பெருமையை பறைசாற்றியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த டுவீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 
மேலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்பஜன் சிங் சமீபகாலமாக தமிழில் டுவீட் செய்ததையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி, ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதுபோல் தமிழ், பஞ்சாபில் பரவியுள்ளது என்பது உண்மைதான் என்று கூறி வருகின்றனர். அரசியல்வாதிகள் உள்நோக்கத்தோடு இந்தி திணிப்பை எதிர்த்து வரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் உணர்வுபூர்வமான இந்த டுவீட் பலரையும் கவர்ந்துள்ளது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது !