Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி – இளம்பெண்ணை ஏமாற்றிய மாணவர்

Advertiesment
கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி – இளம்பெண்ணை ஏமாற்றிய மாணவர்
, சனி, 1 ஜூன் 2019 (17:23 IST)
தேனி அருகே உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர்பாண்டி. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அவரது ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பல வருடங்களாய் காதலித்து வந்திருக்கிறார்கள். தற்போது அந்த பெண் பெங்களூரில் நர்சிங் படித்து வருகிறார்.

இருவரும் வெவ்வேறு ஊர்களில் படித்து வந்தாலும் செல்போன் மூலம் ஒருவரோடு ஒருவர் பேசி காதலித்து வந்துள்ளனர். அப்போது கிஷோரை காண்பதற்காக அந்த பெண் அடிக்கடி சென்னை வந்து போயிருக்கிறார். அப்போது கிஷோர் திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண்ணுக்கு உறுதியளித்து, அடிக்கடி அந்த பெண்ணோடு உறவில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கிஷோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கிஷோர் நம்பகமான பதில் எதையும் சொல்லவில்லை. மேலும் கிஷோரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை போனில் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் கிஷோரையும் அவரது குடும்பத்தினரையும் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் கமல்ஹாசன் நீதிமன்றத்தில் ஆஜர் ;பரபரப்பு தகவல்