ஏப்ரல் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் தகவல்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (18:39 IST)
உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்கள் நடைபெறும் போது மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி அம்மாவட்டத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்பதும் இந்த திருவிழாவை காண்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவை ஒட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments