Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நன்செய் புகழூர் அழகரசனாருக்கு பாராட்டு நிகழ்வு

Advertiesment
Nansey Pukhazur Alagarasanar
, சனி, 2 டிசம்பர் 2023 (21:08 IST)
தமிழ்ச் செம்மல் விருதாளர் நன்செய் புகழூர் அழகரசனாருக்கு பாராட்டு நிகழ்வு  நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ஜோதி கலந்து கொண்டார்.
 
கரூர் திருக்குறள் பேரவை சார்பில் தமிழ்ச் செம்மல் - 2022 விருது பெற்ற கவிஞர் நன்செய்ப் புகழூர் அழகரனார் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
 
தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் நன்செய் புகழூர் அழகரசனின் சிறப்புகளையும் தமிழ்நாடு அரசு மொழிக்காகவும் , மொழி அறிஞர்கள் ஆர்வலர்களுக்காக வழங்கும் விருதுகள் பரிசுகளையும் பாராட்டி வரவேற்புரை ஆற்றினார்
ப.தங்கராசு ஐயா தலைமை உரை ஆற்றினார்.
 
தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஜோதி அவர்கள் அரசின் திட்டங்கள் , செய்பாடுகள் , மொழி நாள் வார விழா கொண்டாடப்படுவதை எடுத்துரைத்து அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுத்து நன்செய்ப்புகழூர் அழகரசனை பாராட்டினார்.
 
திருக்குறள் பேரவை சார்பிலும் கலந்து கொண்ட தமிழ் அமைப்புகள் ஆர்வலர்கள் சார்பிலும் சிறப்புச் செய்யப்பட்டது.
 
கவிஞர் இனியன் , கவிஞர் கன்னல் , க. ப பாலசுப்ரமண்யம் , தமிழ்ச் செம்மல் இளவரசி , ஓவியர் ரவிக்குமார் , எழுத்தாளர் ஆதவன் பேனா நண்பர் பேரவை திருமூர்த்தி கவிஞர் ரோட்டரி பாஸ்கர் , வைஷ்ணவி மெய்யப்பன் , மெடிக்கல் சோமு , லயன் வெங்கட்டரமணன் , லயன் ஜெயப்பிரகாஷ் , லயன் யோகா வையாபுரி , கவிஞர் பரமத்தி சரவணன் உட்பட பலர் வாழ்த்தினர்.
 
நன்செய்ப்புகழூர் அழகரசன் ஏற்றரை ஆற்றினார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்'- பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியீடு