Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றால்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

Advertiesment
தமிழக கல்வித்துறை

Mahendran

, திங்கள், 5 மே 2025 (10:30 IST)
தமிழகத்தில் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கும், அந்த மாணவர்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கும் அரசு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இப்போது, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 
இதில், 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும், 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் விவரங்கள் மற்றும் அந்தப் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களின் பட்டியலையும் தயார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த தகவல்களை தொகுத்து, தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிக்கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும். எந்தவொரு தாமதமும் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
தற்போது தமிழகத்தில் 3,088 உயர்நிலை மற்றும் 3,174 மேல்நிலை அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை சிறப்பித்து ஊக்குவிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!