Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. எதற்காக அனுமதிக்கப்பட்டர் என தெரியாது - அப்போலோ நர்ஸ் அதிர்ச்சி வாக்குமூலம்

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (13:49 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எந்த நோய்க்கான அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலே தனக்கு தெரியாது என அப்போலோ நர்ஸ் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜெ.வின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அப்போலோ மருத்துவர் நளினி மற்றும் செவிலியர் பிரேமா ஆண்டனி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவில் பணியில் இருந்த செவிலியர்களை கண்காணிக்கும் பணியை பிரேமா செய்து வந்தார். அதாவது, மருத்துவர்களின் அறிவுரைப்படி ஜெ.விற்கு சரியான நேரத்தில் உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறதா மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியை பிரேமா செய்துள்ளார்.

 
விசாரணை ஆணையத்தில் ஆஜரான பிரேமா, ஜெயலலிதா என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டர் என எனக்கு தெரியாது என வாக்குமூலம் அளித்தார். இதுகேட்டு ஆறுமுகசாமி அதிர்ச்சியடைந்தார். உங்களுக்கு எப்படி அது தெரியாமல் இருக்கும் என அவர் கேள்வி எழுப்பிய போது, அதுபற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என அவர் பதிலளித்தார்.
 
அவர் உண்மையிலேயே இப்படி கூறுகிறாரா அல்லது இந்த பதிலை கூறுமாறு அவர் நிர்பந்திக்கப்பட்டாரா என்பதில் சந்தேகம் நீடிப்பதால், மீண்டும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments