Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் கமல் மட்டுமே எக்ஸ்ட்ரா வேட்பாளர்.. மற்ற கட்சிகள் இல்லை என தகவல்..!

Mahendran
சனி, 20 ஜனவரி 2024 (18:38 IST)
திமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் தொடரும் என்றும் புதிதாக எந்த கட்சியும் உள்ளே நுழைய வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனுக்கு மட்டும் திமுக கூட்டணியில் இடம் ஒன்று என்றும் கூறப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக கூட்டணி இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை தொடரும் என்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு புதிதாக நுழைய வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனுக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்க திமுக தலைமை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியை குறைத்து கமலஹாசனுக்கு கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளில் தான் கூட்டணி கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றன.  ஆனால் அதில் சில மாற்றம் செய்ய திமுக தலைமை விரும்புவதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments