Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழங்கால கார் கண்காட்சி..! வியப்புடன் கண்டு ரசித்த மக்கள்..!!

பழங்கால கார் கண்காட்சி..! வியப்புடன் கண்டு ரசித்த மக்கள்..!!

Senthil Velan

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (12:11 IST)
கோவையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் காட்சி படுத்தப்பட்டன.
 
கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில், உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது.
ALSO READ: இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்..! சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியதாக தகவல்.!!
 
இந்த கண்காட்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து கார்களில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களை காட்சிப்படுத்தினர்.
webdunia
 
சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1995"ஆம் ஆண்டு வரையுள்ள 100"க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
 
பழைய மாடல் பென்ஸ் , செவர்லே , ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர் வோக்ஸ்வேகன் , பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன. திடீரென பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
 
தொடர்ந்து பழங்கால கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் கோவை லூலு மால் வளாகத்தில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்..! சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியதாக தகவல்.!!