போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

J.Durai
வியாழன், 27 ஜூன் 2024 (23:35 IST)
தமிழ்நாடு முழுவதும் போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
போதை ஒழிப்பு குறித்து ,காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற வருகிறது.
 
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் போதை ஒழிப்பை முன்னெடுக்கும் விதமாகவும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து பலகையானது விமான நிலையம் நுழைவாயில் மற்றும் பயணிகள் உள்ளே வெளியே வரும் வழிகளில் வைக்கப்பட்டது.
 
மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், அவனியாபுரம் காவல் துறையினர் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்திடும்  பலகையானது வைக்கப்பட்டது.
 
மேலும் ,விமான நிலையத்தின்  உள்ளே இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளியே வரும் பயணிகளிடம் மத்திய பாதுகாப்பு படையினர் துணை ஆணையர் விஸ்வநாதன், அவனியாபுரம் காவல் உதவிஆணையர் செல்வகுமார் காவல் ஆய்வாளர் மணிக்கு மார் மற்றும்  விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து பயணிகளுக்கு போதை ஒழிப்பு  விழிப்புணர்வு குறித்த பிரசுரங்களை கொடுத்தனர்.
 
போதையினால் எந்த அளவு விபத்துகளும், ஆபத்துக்களும், போதையினால் மனிதனின் உடலில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது குறித்து பயணிகளுக்கு விரிவாக  எடுத்துரைத்தனர்.
 
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பலகையில் பயணிகள் முன்வந்து போதையை இனி பயன்படுத்த மாட்டோம் என்று காவல்துறை அதிகாரிகள்  முன்  உறுதி மொழி எடுத்துக் கொண்டு போதை ஒழிப்பு கையெழுத்து பலகையில் பயணிகள் ஆர்வமாக கையெழுத்திட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments