Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயபாஸ்கர் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையிடம் வழங்க கூடாது: லஞ்ச ஒழிப்புத்துறை

vijayabaskar

Mahendran

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:17 IST)
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகை, நகல்களை அமலாக்கத்துறை வசம் வழங்கக்கூடாது என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜர் ஆகினர்.

அப்போது குற்றப்பத்திரிகை நகல்கள், ஆதாரங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறை சார்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்ததற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தாங்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை, ஆதாரங்களை அமலாக்கத்துறையிடம் வழங்க கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் சக்கரங்களுக்கு நடுவே சிக்கிய சிறுவன்! 100 கி.மீ தூரம் பயணித்த சம்பவம்!