Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: என்ன காரணம்?

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: என்ன காரணம்?

Mahendran

, வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:43 IST)
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான 97. 7 9 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி சில தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் அவர் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைதானார்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் 10% வட்டி வழங்கப்படும் என்று தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்த நிலையில் அதில் பொதுமக்களிடம் இருந்து 6600 கோடி வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த பிட்காயினில் முதலீடு செய்த ஏராளமானோர் பணத்தை இழந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது

இதனை அடுத்து ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜகுந்தராவுக்கு சொந்தமான 97.79 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாகவும் இதில் ஷில்பா ஷெட்டி குடியிருக்கும் மும்பை வீடும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. பிட்காயின் மோசடியில் கிடைத்த பணத்தில் தான் இந்த வீடு வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்.. இதுதான் எனது கனவு: டி.கே. சிவக்குமார்