Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமொரு நற்செய்தி !-சு.வெங்கடேசன் எம்பி.,

Sinoj
செவ்வாய், 5 மார்ச் 2024 (15:57 IST)
மதுரையின் விளையாட்டு வீரர்களின் தேவை கருதி தமிழக அரசு 8.25 கோடி செலவில் செயற்கை நூழிலை ஓடுபாதையும், புல்தரை கால்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆணை பிறப்பித்ததது என்று  கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;
 
''எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் செயற்கை நூலிழை ஓடுபாதை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலானதால் அதை மாற்ற வேண்டுமென்று கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தினோம் . 
 
மதுரையின் விளையாட்டு வீரர்களின் தேவை கருதி தமிழக அரசு 8.25 கோடி செலவில் செயற்கை நூழிலை ஓடுபாதையும், புல்தரை கால்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆணை பிறப்பித்தது. 
 
அந்தப் பணிகளின் துவக்கவிழா  நிகழ்வில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் திரு பி.மூர்த்தி அவர்களோடு பங்கேற்றேன். உடன் சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மரியாதைக்குரிய மேயர் இந்திராணி பொன்வசந்த், துணைமேயர் நாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா இஆப உள்ளிட்டோர் '' என்று தெரிவித்துள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments