கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதையும் மீறி அதிக கட்டணம் வசூலிப்பதாக ஒருசில தனியார் மருத்துவமனைகள் மீது புகார்கள் எழுந்தன
இந்த புகார்களின் அடிப்படையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மீது தமிழக அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது என்பதும் கொரோனா சிகிச்சைக்கான அனுமதியை ரத்து செய்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது அடுத்ததாக இன்னொரு தனியார் மருத்துவமனையும் இதே குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததால் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கான அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
ஏற்கனவே கொரோனாவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என முதல்வர் உட்பட அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தபோதிலும் அதனை கண்டுகொள்ளாமல் தனியார் மருத்துவமனையில் இஷ்டத்திற்கு சிகிச்சை கட்டணங்களை வசூலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது