Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 5,495 பேர் கொரோனாவால் பாதிப்பு ! 76 பேர் உயிரிழப்பு

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (18:40 IST)
உலகில் கொரொனா தாக்கம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திப் பலரையும் பலிகடா ஆக்கிவரும் நிலையில்,  இத்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரொனா தொற்றால் மேலும்  இன்று 5495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது.

இன்றும் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆகும். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,307 ஆக அதிகரித்துள்ளது.

இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,227 ஆகும். மொத்தமாக 4,4,1869 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் கொரொனாவால் 978 பேர் பாதிகப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,215 பேர் குணமடைந்துள்ளதாகவும், இன்று 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை மொத்தம்  1,47,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments