Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்படையின் அத்துமீறல்..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (07:50 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் இன்று மீண்டும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக மத்திய மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

முன்னதாக டிசம்பர் 3ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் அவர்கள் பயணம் செய்த இரண்டு விசைப்படகுகளையும் சிறை பிடித்தது. கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடந்ததாகவும் செய்தி வெளியானது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை எச்சரிக்கை..!

அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..!

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

அடுத்த கட்டுரையில்
Show comments