நாளை முதல் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்
இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அந்த வகையில் தேசியர் பேரிடர்  மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ்  ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை முதல்  தமிழக  அரசு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இன்று புறநகர் ரயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
நாளை முதல் காலை 3 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை  டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.