தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு, ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள் உள்பட கடைகள் எதுவும் திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் பல்வேறு துறையினருக்கும் விதிக்கப் பட்டிருந்த போதிலும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின
இதனை அடுத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஊரடங்கு உத்தரவு பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் இரவு 9 மணிக்கு மூடப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.