Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 26ஆம் தேதி புதிய பாஜக தலைவர் அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் தமிழிசை, வானதி, நயினார் நாகேந்திரன்..!

Mahendran
வியாழன், 23 ஜனவரி 2025 (10:43 IST)
ஜனவரி 26 ஆம் தேதி தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர் குறித்து அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும், இதனை அடுத்து வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய மூவரும் ஆர்வமுடன் இந்த அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தல் மூலம் நிர்வாகிகள், இணை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜகவின் மாவட்ட தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டு 33 மாவட்டங்களுக்கு தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 33 மாவட்டங்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவர்  அறிவிப்பு, வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மாநில தலைவர் போட்டிக்கு தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவர் போட்டியில் இருக்கின்றனர். இதன்படி இந்த மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது ஏற்கனவே தலைவராக இருக்கும் அண்ணாமலை மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு புதிய தலைவர் தேர்வு இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments