கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அதில் 243 பேர் உயிரிழந்தனர். பலரும் காயம் அடைந்த நிலையில் இந்த விபத்தில் 32 பேரை காணவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் காணாமல் போனவர்கள் பட்டியல், அவர்களது உறவினர் அளித்த புகார் மற்றும் எஃப் ஐ ஆர் அடிப்படையில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்ட நிலையில் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டதால் இனிமேலும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்த பட்டியலில் உள்ளவர்கள் காலமானதாக அரசு உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து காலமானதாக அறிவிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை உயிரிழந்து விட்டதாக அறிவிக்க மாநில அரசு முடிவு செய்தது என்றும் அதிகாரப்பூர்வமாக மாநில அரசு இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து விரைவில் காணாமல் போனவர்களின் உறவினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அதன் பிறகு அவர்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் வீடு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.